பிரான்ஸ் நாட்டில் பெண்மணி ஒருவர், உடலில் ஆடை அணிந்தது போன்று ஓவியம் வரைந்து அரை நிர்வாணமாக வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரான்ஸில் உள்ள லில்லி நகரில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அப்பெண்மணி, கால் சட்டை அணிந்தது போல் ஓவியம் வரைந்து அரை நிர்வாணமாக வலம் வந்துள்ளார்.
உண்மையில் அந்த பெண்மணி எந்தவித கால்சட்டையும் அணியவில்லை. அவர் சிறு உள் ஆடை அணிந்து, அதன் மீது கால் சட்டை அணிந்தது போல் ஒவியம் வரைந்துள்ளார்.
இதை பார்த்த மக்கள் திகைத்து போயுள்ளனர். தெருக்களில் வலம் வந்த பெண் ஒரு நடிகை என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் உடலில் ஓவியத்தை வரைந்துபார்க்க விரும்பியதால் இவ்வாறு செய்ய ஒப்பு கொண்டதாகவும், மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி செய்யவில்லை என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment